அட கடவுளே..இப்படி கூட ஒரு தாய் இருப்பாளா !

குழந்தைகளுக்கு வெளியில் தான் ஆபத்து என்று பெற்றோர்கள் எண்ணுகிறோம்.ஆனால் சில குழந்தைகளுடன் பெற்றோரே சரி வர அமைவதில்லை.

விழுப்புரம் அருகே தன் குழந்தையை தாய் ஒருவர் கொடூரமாக தாக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகின.இதை பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அந்த குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துளசி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோ வைரல் ஆகியது.

இந்நிலையில் குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டத்தில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.

கணவன் பிரிந்து தவறான தொடர்பில் ஒருவருடன் இருந்த துளசிக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் துளசி கைது செய்யப்பட்டுள்ளார்.