தமிழ் சினிமாவில் சிம்பு முன்னணி நடிகருள் ஒருவர்.சிம்புவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.சிம்பு அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.மேலும் சில நாட்களுக்கு முன்பு சிம்புவிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.பிறகு ரெட் கார்டைத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நீக்கியது.
தற்போது சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கௌதம் மேனன் இயக்குகிறார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலங்களை ரசிகர்கள் அதிகம் பின்தொடருவர்கள்.மேலும் சில பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருப்பார்கள்.
அதே போல் தற்போது நடிகர் சிம்பு சுமார் 300 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்றுள்ளார்.கடந்த 300 நாட்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் கணக்கைத் தொடங்கினார் மேலும் சில நாட்களிலே தினமும் ஃபாலோயர்கள் வந்தனர்.
மேலும் சிம்பு தான் நடித்து வரும் படங்கள் உள்பட பல்வேறு விஷயங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



