பிக் பாஸ் சீசன் 5 குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகப்போகிறது !

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி விஜய் டிவி யில் கடந்த 4 சீசன் களாக ஒளிபரப்பாகிறது.இதனை காண நிறைய ரசிகர்கள் உண்டு.இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகர் கமல்ஹாசன்.பிக் பாஸ் சீசன் ஒன்று முதல் நான்கு சீசன் வரை அனைத்தும் செம ஹிட் ஆனது.

தற்போது சீசன் 5 விரைவில் தொடங்கவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இன்று 5ஆவது சீசன் தொடர்பான முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாக தெரிகின்றது.

விஜய் டிவியின் ட்விட்டர் பக்கத்தில் 5.55 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக பதிவிடப்பட்டுள்ளது.இது பிக் பாஸ் குறித்த தகவல் தான் என்று அனைவரும் கூறிவருகின்றனர்.