தலிபான்கள் முன்பு போல் இல்லை தற்போது மாறியுள்ளதாக கூறிய பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் !

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அந்த நாட்டுக்கு புதிய பெயராக இஸ்லாமிக் எமிரேட் ஆப் ஆப்கானிஸ்தான்’ என்று அதற்கு பெயர் சூட்ட இருக்கிறார்கள்.மேலும் 20 ஆண்டுகளாக அங்கு இருந்து அமெரிக்கா ராணுவமும் வெளியேறிவிட்டது.

ஆப்கானிஸ்தானில் ஜனநாயகத்திற்கு இடமில்லை, ஷரியத் சட்டம் தான் என தெளிவாக தலிபான்கள் அறிவித்துவிட்டனர்.இந்நிலையில்,பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி தலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பது,தலிபான்கள் நேர்மறையான மனநிலையில்தான் ஆட்சிக்கு வந்துள்ளார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. கிரிக்கெட் விளையாட அனுமதித்ததுபோல், பெண்கள் பணிக்குச் செல்ல இந்த முறை தலிபான்கள் அனுமதிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தலிபான்கள் கிரிக்கெட் விளையாட்டை மிகவும் விரும்பக்கூடியவர்கள் என்றும்தெரிவித்தார்.இவ்வாறு பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்தது அனைவரையும் வியப்பில் ஆய்தியுள்ளது.