பிரபல நடிகர் யூசுப் ஹுசைன் காலமானார் !

தூம் 2′, ‘ரயீஸ்’ மற்றும் ‘ரோட் டு சங்கம்’ போன்ற படங்களில் நடித்ததற்காக அறியப்பட்ட மூத்த நடிகர் யூசுப் ஹுசைன் கோவிட் காரணமாக காலமானார். அவருக்கு வயது 73

நடிகர் ஹுசைனின் மருமகன் திரைப்பட தயாரிப்பாளர் ஹன்சல் மேத்தா இந்த செய்தியை தெரிவித்துள்ளார்

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று யூசுப் உசைன் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு நடிகர்கள் அபிஷேக் பச்சன், மனோஜ் பாஜ்பயி உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.