ஏழு ஸ்வரங்களுக்குள் ஒரு வாணி ஜெயராம்..!

பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பிறந்தநாள் இன்று. தன் குரலினால் மக்களின் மனதை மயக்க வைத்தவர் இவர். இதுவரை 10,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். வேலூரில் பிறந்து வளர்ந்த இவர், வேலை பார்த்தது வங்கி ஊழியராக வேலை மாற்றம் காரணமாக மும்பை சென்ற இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்டது ஹிந்தி திரையுலகம்.

பின்பு, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி,மராத்தி, ஒடியா என பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல், பாடிய பல மொழிகளில் அம்மாநிலத்தின் உயரிய விருதுகளை பெற்றிருக்கிறார்.

கிராமிய பாடலாக இருந்தாலும் சரி, கர்நாடக பாடலாக இருந்தாலும் சரி, பாடலின் நயங்களால் மக்களை அந்த இடத்திலிருந்தே உணர வைப்பதில் வல்லவர். தமிழக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். காதல் பாடலாக இருந்தாலும், பெண்களின் மனதை வெளிப்படுத்தும் பாடலாக இருந்தாலும் , டூயட் பாடலாக இருந்தாலும், அந்த காதாபாத்திரமாகவே மாறி பாடக்கூடியவர்.

தனிப்பாடல்கள் தவிர டூயட் பாடல்களை முன்னணி பாடகர்களோடு பாடியிருக்கிறார். “ஒரே நாள் உன்னை நான் நிலாவில் காண்கிறேன்”, “பாரதி கண்ணம்மா”, “பூந்தென்றலே…”, “நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன்” என இவர் பாடிய ஒவ்வொன்றும் முத்து முத்தனாவை. இவ்வளவு சிறந்த பாடல்கள் பலவற்றை கொடுத்த வாணி ஜெயராம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!