நிவேதா பெத்துராஜ் பிறந்தநாள் இன்று..!

ஜெயம் ரவியின் ‘டிக் டிக் டிக்’, உதயநிதி ஸ்டாலினின் ‘பொதுவாக என் மனசு தங்கம்’, விஜய் ஆண்டனியின் ‘திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களில் நடித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் நிவேதா பெத்துராஜ்.

சில தெலுங்கு படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜுக்கு, அங்கே எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே தொடர்ந்து தமிழில் கவனம் செலுத்தி வருகிறார்.

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய 30 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிவேதா பெத்துராஜுக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.