வண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா

Vandalur zoo
வண்டலூர் பூங்காவில் 70 பேருக்கு கொரோனா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 23,989 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 1.31 கோடியாக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஊழியர்களுக்கு ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக வண்டலூர் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் மொத்தம் 2000 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மொத்தம் உள்ள 350 ஊழியர்களில் 70 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் வரும் ஜனவரி 31 வரை பூங்கா மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் வைரஸ் பாதிப்பு சூழலைப் பொறுத்தே பூங்காவைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்கமுன்னதாக கடந்த ஆண்டு 2ஆம் அலை சமயத்தில் சென்னை வண்டலூர் பூங்காவில் பல சிங்கங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.