bigg boss 5 finale : இன்று பிரம்மாண்டமான பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி

Bigg Boss 5 Tamil
இன்று பிரம்மாண்டமான பிக் பாஸ் ஃபினாலே நிகழ்ச்சி

வழக்கமாக லைவ்வாக ஒளிபரப்பாகும் ஃபினாலே நிகழ்ச்சி, இந்த முறை ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட இருக்கிறது. கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அனைவரின் நலன் கருதி விரைவாக ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டிருக்கலாம்.

ராஜூ, பிரியங்கா, பாவ்னி, நிரூப், அமீர் ஆகியோர் ஃபைனல்ஸிட்டாக தேர்வாகியுள்ளனர். இதில் ராஜூ மற்றும் பிரியங்கா முதல் 2 இடங்களை பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ராஜூ தான் வெற்றி பெற அதிகம் வாய்ப்புள்ளதாக தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த சீசனின் தீம் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்று சீசனின் ஆரம்பத்தில் கூறிய கமல், இறுதிப் போட்டியிலும் அதையே கூறுகிறார். எனவே, டைட்டில் வின்னர் யார் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த புரோமோவில் உள்ள காட்சிகளின் படி, சீசன் 5ன் போட்டியாளர்களான இமான் அண்ணாச்சி, அபிஷேக், மற்றும் மதுமிதா ஆகியோர் இறுதிப் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

பிக் பாஸ் சீசன் 5 இன் இறுதிப்போட்டி இன்று மாலை 6.30 மணி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது.