Valimai: மளிகை பொருட்கள் வாங்கினால் பாப்கார்னுடன் வலிமை டிக்கெட் இலவசம்

valimai-tickets-with-popcorn-are-free-if-you-buy-groceries-in-state-co-operative-store
வலிமை டிக்கெட்

Valimai: அஜித் எந்த விளம்பரப் படத்திலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை பல வருடங்களாக செயல்படுத்தி வருகிறார். ஆனால், அவரது பெயரையும், படத்தையும் விளம்பரப்படுத்தி வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

வலிமை ஃபீவர் தமிழகத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் ஒரு பக்கம் கட்அவுட், பேனர், போஸ்டர், தோரணம் என்று அசத்திக் கொண்டிருக்கிறார்கள்.

திரையரங்குகள் அதிகாலை காட்சிகள், நள்ளிரவு காட்சிகள் என ஸ்பீடா மீட்டரை தெறிக்கவிடுகின்றன. மத்திய அரசின் தென்னிந்திய மாநில கூட்டுறவு அங்காடி மையம் தனது பங்குக்கு ஒரு ஆஃபரை அறிவித்துள்ளது. தங்களிடம் மளிகை பொருட்கள் வாங்கினால் பாப்கார்ன், குளிர்பானம் சகிதம் வலிமை டிக்கெட் இலவசம் என அறிவித்துள்ளது.

முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது திரைத்துறை சார்ந்த நிறுவனங்கள், திரையரங்குகள் இதுபோல இலவசங்களை அறிவிப்பது உண்டு. ஆனால் முதல்முறையாக வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் இயங்கிவரும் SIMCO எனும் மத்திய அரசின் தென்னிந்திய கூட்டுறவு பல்பொருள் அங்காடி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தங்களிடம் 2999 ரூபாய்க்கு அதிகமாக பொருட்கள் வாங்குபவர்களுக்கு வலிமை படத்தின் டிக்கெட்டுடன் பாப்கார்ன் குளிர்பானம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.

அஜித் எந்த விளம்பரப் படத்திலும் நடிப்பதில்லை என்ற கொள்கையை பல வருடங்களாக செயல்படுத்தி வருகிறார். ஆனால், அவரது பெயரையும், படத்தையும் விளம்பரப்படுத்தி வியாபாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அஜித் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற பெருமையை வலிமை பெறும் என்பதையே இதுபோன்ற விளம்பரங்கள் உணர்த்துகின்றன.

Valimai tickets with popcorn are free if you buy groceries

இதையும் படிங்க: Quick tips for instant glow : உடனடி சிகப்பான சருமம் பெற