valimai update : வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு !

valimai update : வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு
வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

valimai update : வினோத் இயக்கத்தில், போனி கபூர் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் வலிமை.அஜித்தின் வலிமை திரைப்படம் 2022 பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும். இப்படம் பல மொழிகளில் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வலிமையின் தயாரிப்பு மற்றும் வெளியீடு பல முறை தாமதமானது.

இந்நிலையில் ‘வலிமை’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.மேலும் திரைப்படத்துக்கு சென்சார் போர்டு யூஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.valimai update

இந்நிலையில்,வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாகும் என்ற நிலையில், தற்போது வலிமை ரிலீஸ் ஒத்தி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

ஒமிக்ரான் பரவல் காரணமாக வலிமை படத்தின் வெளியீட்டை தள்ளி வைப்பதாக வலிமை படக்குழு அறிவித்துள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி, உள்ளிட்ட மொழிகளில் வலிமை வெளியாகும் என்று எதிர்பாக்கப்பட்டது.

இதையும் படிங்க : TN news : பிரதமரின் பொங்கல் விழா ரத்து !