நடிகர் விவேக் மரணம் தொடர்பாக பேசிய மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அதிகாரி பூபேஷ் அளித்த புகாரின் பேரில் நடிகர் மன்சூர் அலிகான் மீது தொற்று நோய் தடுப்பு, பேரிடர் மேலாண்மை சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடபழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.



