கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு காலத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் உள்ள 80 ஆயிரம் கிராமங்களுக்கும் நேரடியாக வீடு வீடாகச் சென்று, தடுப்பூசி வழங்கும் திட்டம் துவக்கப்படும்,’ என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் விரைவில் தொடங்கும் என்று கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 525 ஊராட்சிகள் உள்ளன. ஒரு ஊராட்சிக்கு 7 கிளை கிராமங்கள் என்கிற வகையில் 80 ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தப்படும் .
இதையும் படிங்க : விரைவில் வருகிறது மாதாந்திர மின் கணக்கீடு !



