என்னது புதினாவில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

புதினா ஒரு வாசனையுடைய தாவரமாகும். இதன் வாசனையால் பிரியாணி போன்ற சமையலில் பயன்படுகிறது. வாயில் இருக்கும் துர்நாற்றத்தை போக்க இதை வாயில் போட்டு மெல்வதால் வாயிற்கு நல்ல புத்துணர்ச்சி கிடைக்கிறது. அதனால் தான் மெந்தோ ஃபிரஸ், சுவீங்கம், மவுத் வாஷ் போன்றவற்றில் கூட இதை பயன்படுத்துகின்றனர்.

இது உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக் கூடிய ஒரு தாவரமாகும். நிறைய மருத்துவ குணங்களை கொண்டு இருப்பதால் இந்த புதினா இலைகளை நீங்கள் டீ போட்டு குடிக்கலாம்.

இதன் மூலம் நிறைய நன்மைகளை பெற முடியும். தலைவலி, சீரண சக்தி, வாய் ஆரோக்கியம் என்று நிறைய இடங்களில் பயன்படுகிறது. இந்த இலைகளிலிருந்து பெறப்படும் எண்ணெய்களும் நமக்கு உடம்பு வலிகளை நீக்க உதவுகின்றன.