சென்னையில் இன்றும் நாளையும் மழை பெய்யும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளையும் (தீபாவளி அன்றும்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையாக (சென்டிமீட்டரில்) காரியகோவில் அணை (சேலம்) 9 செ.மீ, நாகப்பட்டினம், பாளையங்கோட்டை, மகாபலிபுரம், ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 6 செ.மீ, எண்ணூர், கடலூர், தூத்துக்குடி, ரெட் ஹில்ஸ் (திருவள்ளூர்) பகுதிகளில் தலா 5 செ.மீ, பாபநாசம் (திருநெல்வேலி), தம்மம்பட்டி (சேலம்), செங்கல்பட்டு , சீர்காழி (நாகப்பட்டினம்) , செய்யூர் (செங்கல்பட்டு) பகுதிகளில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என குறிப்பிட்டுள்ளது.