ஜோ பிடன் போன்றவர்களிடம் நான் தோற்பதை பற்றி கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது-டிரம்ப்

அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே மோசமான அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் உள்ளார் என எதிர்த்து போட்டியிடும் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவ.,3ம் தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால் இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், பிடனை கடுமையாக சாடினார் டிரம்ப்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது: அமெரிக்க தேர்தல் வரலாற்றிலேயே மோசமான அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் உள்ளார். அதுதான் எனக்கு ஒருவித அழுத்தம் கொடுக்கிறது. ஜோ பிடன் போன்றவர்களிடம் நான் தோற்பதை பற்றி கற்பனை கூட செய்து பார்க்கமுடியாது. ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால், அதிகாரம், தீவிர இடதுசாரிகளின் கைகளுக்கு போய்விடும். இந்த தேர்தலில் அவர் (பிடன்) வென்றால், சீனா வெற்றி பெற்றதற்கு சமமாகும். நான் வென்றால், நீங்கள் வெற்றியடைவீர்கள், அமெரிக்கா வெற்றிபெறும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here