போர்க்களமாக மாறிய வாஷிங்டன்!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் பேரணியில் வன்முறை வெடித்ததால், வாஷிங்டன் நகரமே போர்க்களமாக காட்சியளித்தது.

இந்நிலையில், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு, ட்ரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அப்போது, விர்ஜினியாவில் உள்ள கோல்ஃப் மைதானத்திற்கு சாலை மார்க்கமாக ட்ரம்ப் புறப்பட்டார். ஆதரவாளர்களுக்கு மத்தியில் கார் ஊர்ந்து சென்றது. இதையடுத்து, ’மில்லியன் மெகா பேரணி’ (Million MAGA March) என்ற பெயரில், தங்கள் ஆதரவைத் தெரிவிக்கும் வகையிலும், “மீண்டும் ட்ரம்ப் ஆட்சி வேண்டும்” என்று முழக்கமிட்டவாறு ஆயிரக்கணக்கானோர் கொடியேந்திச் சென்றனர்.

இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தி வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைந்துபோகச் செய்தனர். ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததால், வாஷிங்டனில் நகரமே போர்க்களமாக மாறியது.