மருத்துவக் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று வெளியிடுகிறார். 7 .5 சதவீத உள்ஒதுக்கீடு காரணமாக இந்த ஆண்டு 395 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன.

கொரோனா காரணமாக வழக்கமாக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு பதில், இந்த ஆண்டு, வேறு இடத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடு ஏதும் ஏற்படாதவாறு மாணவர்களின் கை ரேகை, விழித்திரை பதிவுடன் மற்றும் புகைப்படம் உள்ளிட்ட ஆதாரங்கள் பெறப்படுகின்றன.