இன்று 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல்

மக்களவையில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

மத்திய பட்ஜெட் பற்றி அக்குட் தர நிர்ணயம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், “உள்கட்டமைப்பில் பொது மற்றும் தனியார் முதலீடுகள் மூலம் குறிப்பிடத்தக்க உந்துதலை கொடுக்க வேண்டும்.

தொழில்துறை, சேவைகள், விவசாயத்துறை ஆகியவற்றில் பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு உதவ வேண்டும். வரி வருவாயில் சமரசம் செய்து கொள்ளாமல், தனியார் நுகர்வுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வி துறையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும” என கூறியது.