எடப்பாடி ஆட்சியில் நிம்மதி இல்லை: மு.க.ஸ்டாலின்!!!

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கன்னியாகுமரி கிழக்கு – மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ‘முப்பெரும் விழாவில்’ திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும் -மாநிலத்தை ஆளும் ஆட்சியாக இருந்தாலும், அவை விவசாயிகளை மதிக்கவில்லை; விவசாயத்தையும் மதிக்கவில்லை. ஏழைத் தாயின் மகன் நான்” என்கிறார் பிரதமர் மோடி. நானும் விவசாயிதான் என்கிறார் பழனிசாமி. ஆனால் இவர்கள் இருவரும் ஏழைகளையும் காப்பாற்றவில்லை. விவசாயிகளையும் காப்பாற்றவில்லை.

எடப்பாடி ஆட்சியில் எந்தத் தரப்பும் நிம்மதியாக இல்லை. அமைச்சரவையில் இருக்கும் 30 பேர் மட்டும் தான் நிம்மதியாக இருக்கிறார்கள். அவர்களும் கடந்த ஒரு வாரமாக நிம்மதியாக இல்லை. ஜெயலலிதா மரணம் அடைந்து இந்த நான்கு ஆண்டுகளில் ஆட்சியே நடக்கவில்லை.

அவர்கள் நாற்காலியைக் காக்கும் போராட்டம்தான் நடக்கிறது மக்களை மறந்துவிட்டு, நாற்காலியையே நினைத்துக் கொண்டிருக்கும் கொள்ளைக் கூட்டத்தை விரட்டும் ஜனநாயகப் போராட்டம் தொடங்கிவிட்டது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here