வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் (Delhi Chief Minister Arvind Kejriwal) கோவா மாநிலத்தின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஏழு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஏழு முக்கிய அறிவிப்பு:

1 – ஒவ்வொரு துறையிலும் அரசு வேலையில் சேர கோவா இளைஞர்களுக்கு உரிமை உண்டு.

2 – கோவா மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து வேலையில்லாத ஒரு இளைஞருக்கு அரசு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.

3 – வேலைவாய்ப்பு இல்லாதா இளைஞர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

4 – 80 சதவீத வேலைகள் கோவா இளைஞர்களுக்கே ஒதுக்கித் தரப்படும். தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இத்தகைய ஒரு சட்டம் கொண்டு வரப்படும்.

5 – கொரோனா காரணமாக, கோவாவின் சுற்றுலாவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுலாத்துறையைச் சார்ந்துள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மறுசீரமைப்பு செய்யும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

6 – சுரங்கத்துறையில் சார்ந்த குடும்பங்களுக்கும் அவர்களுக்கான வேலை மறுசீரமைப்பு செய்யும் வரை, மாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

7 – மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க ஸ்கில் பல்கலைக்கழகம் (Skill University) திறக்கப்படும்.

இதையும் படிங்க: நாளை வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள்