Online Classes: அடுத்த வாரம் ஆன்லைன் வகுப்புகள்

ஆன்லைன் வகுப்புகள்

Online Classes: மார்ச் 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் தொடங்கப்படும் என பல்கலைக்கழகத்திலிருந்து மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிவ் தேசிய மெடிக்கல் கல்லூரியில் ஆன்லைன் வகுப்புகள் அடுத்த வாரம் தொடங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளதாக

உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய நெல்லை மாணவர் தெரிவித்துள்ளார். கார் கிவ் நகரிலிருந்து லிபியா வந்து சேர தமிழக அரசு அமைத்துள்ள குழு உதவி செய்ததாகவும் அங்கிருந்து இந்திய தூதரகம் மூலமாக டெல்லிக்கு வந்து சேர்ந்ததாகவும் தெரிவித்துள்ள மாணவர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையை சேர்ந்தவர் மனோ ஜெபத்துரை. உக்ரைன் நாட்டில் கார்கில் நகரில் உள்ள தேசிய மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவராக சேர்ந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் முதல் வகுப்புகள் நடைபெற்ற வந்தது. தற்போது, ரஷ்யா உக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக இந்திய அரசு உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்தியாவின் விமானப்படை விமானங்கள் மூலம் தாய்நாட்டிற்கு அவர்களை அழைத்து வரப்பட்டனர் . அதன்படி, மாணவர் மனோ ஜெபத்துரை நேற்று சொந்த ஊர் வந்து சேர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: MLA Roja: ஆந்திராவில் நடிகை ரோஜா அமைச்சராக வாய்ப்பு