இந்தியா – பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை தான் விவசாயிகள் போராட்டம்- பிரிட்டன் பிரதமர்

இந்தியாவில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி எம்.பி பேசியபோது, அந்த விவகாரத்தை இந்தியா – பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்னை என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்ட பதிலால், அங்குள்ள எம்.பி.க்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர்.

இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் கட்சி எம்.பி ஆன தன்மன்ஜீத் சிங், “இந்தியாவில் வேளாண் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அந்நாட்டு அரசு கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்கள் நடத்துகிறார்கள் என தெரிவித்தார்.

தற்கு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சம்பந்தமே இல்லாத விவகாரத்தை பதிலாக தந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் மட்டுமின்றி அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

“எங்களுடைய பார்வையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடக்கும் விவகாரங்கள் தொடர்பாக நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். ஆனால், இதுபோன்ற விவகாரம் அடிப்படையில் இரு நாட்டு அரசாங்கங்கள் தங்களுக்குள்ளாக தீர்கக வேண்டிய விஷயம், இந்த பதிலை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்,” என்று போரிஸ் ஜான்சன் பேசி அமர்ந்தார்.