எல்ஜி வெளியிடும் கே 42, கே 52 கைப்பேசிகள்!

எல்ஜி நிறுவனம், அதன் எல்ஜி கே 42, எல்ஜி கே 52 கைப்பேசிகளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. நடுத்தர பயனர்களுக்காக இந்த இரண்டு கைப்பேசிகளும் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது சந்தையிலிருக்கும் கைப்பேசிகளுக்கு போட்டியாக, இதன் அம்சங்கள் இல்லை என அறியப்படுகிறது.

அவை எல்ஜி கே 42, எல்ஜி கே 52 ஆக வெளிவரலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தரப் பயனர்களை கவரும் வண்ணம் இதன் அம்சங்கள் இருந்தாலும், தற்போது சந்தையிலுள்ள நடுத்தரக் கைப்பேசிகளுடன் போட்டியிடும் வகையில், இதன் அம்சங்களில் எல்ஜி நிறுவனம் கவனம் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.