இளையோர் தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளி !

டோக்கியோவில் கடந்த மாதம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன.இதில் இந்தியா 7 பதக்கங்களுடன் 48 வது இடத்தை பிடித்துள்ளது.

தற்போது கென்யாவில் ஜூனியர் வீரர்,வீராங்கனைகளுக்கான உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது.இந்த போட்டியில் 20 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் தொடரில் கலந்துகொள்வார்கள்.

கலப்பு ரிலே 4*400மீ ஓட்டப்பந்தயம் போட்டியின் முடிவில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்திய வீரர் அமித் காத்ரி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 10,000 மீட்டர் நடைபயணப் போட்டியில் பங்கேற்ற அமித் காத்ரி போட்டி தூரத்தை 42 நிமிடம் 17.94 விநாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கதை வென்றுள்ளார்.