சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது. புயலால் மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. காற்றுடன் கனமழையும் பெய்ததால் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது.குறிப்பாக, அந்நாட்டின் வெராகூரூஸ் மாகாணம் மிகவும் பாதிக்கப்பட்டது. சூறாவளியால் பல்வேறு வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. கனமழையால் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில், மெக்சிகோவில் ஏற்பட்ட சூறாவளியில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.