குடும்ப தகராறில் ஓட்டலில் தங்கிய நடிகை சித்ரா

சித்ராவின் குடும்பத்திற்கும் ஹேமந்திற்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் அதனால் இருவரும் கடந்த 4ம் தேதி முதல் தனியாக ஓட்டலில் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குளிப்பதற்காக அறையை தாழிட்டுக் கொண்டதாவும், நெடுநேரமாக திறக்காததால் விடுதி ஊழியர்கள் மூலம் மாற்றுச் சாவி கொண்டு அறையை திறந்து பார்த்ததாகவும் ஹேமந்த் தெரிவித்துள்ளார்.

அப்போது, தூக்கிட்ட நிலையில் சித்ரா இறந்து கிடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஹேமந்திடமும், தங்கும் விடுதி ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் முகத்தில் நகக் கீறல் இருப்பது தொடர்பாகவும் காவல்துறை விசாரிக்கிறது. திருவள்ளூர் கோட்டாட்சியரும் விசாரணையை தொடங்கியுள்ளார்.