ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் படையெடுப்பு !

Tirupati Temple
திருப்பதி மலையில் 7 கி.மீ. நீள பக்தர்கள் வரிசை

கொரோனா தொற்று இருந்ததால் மக்கள் வெளியூர் செல்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.மேலும் ஊரடங்கும் இருந்தது.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மக்கள் வெளியூர் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நேற்று காலை ரூ. 300 ஆன்லைன்சிறப்பு தரிசன இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த தரிசனம் வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கு ஆன பதிவு.மேலும் இந்த டிக்கெட்கள் ஒரு மணி நேரத்திலேயே 7.32 லட்சம் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

நவம்பர், டிசம்பர் மாதங்களில் உள்ள மொத்தம் 61 நாட்களில் ஒரு நாளுக்கு 12 ஆயிரம் டிக்கெட்கள்வீதம் ஒரே மணி நேரத்தில் 7.32 லட்சம் டிக்கெட்களும் விற்று தீர்ந்து விட்டன.

கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக, திருமலையில் பக்தர்கள் ஒரு நாளைக்கு 30,000 க்கும் குறைவாகவே செல்கின்றனர். மலைப் பகுதியில் கோவிட்-க்கு முந்தைய காலத்தில் பக்தர்கள் நடமாட்டம் வழக்கமான நாளில் சுமார் 70-80,000 இருக்கும்.

இதையும் படிங்க : நடிகை கமலா காமேஷ் பிறந்தநாள் இன்று !