புதிய அதிபருக்கு டிரம்ப் விட்டுச்சென்ற கடிதம் – அமெரிக்கா !

அமெரிக்கா புதிய அதிபராக ஜோ பிடென் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.முன்னாள் அதிபரான டிரம்ப் தன் பதவி காலம் முடிந்ததை ஒட்டி வெள்ளை மாளிகையில் இருந்து புறப்பட்டார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பிடென்,வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய டிரம்ப் அதற்கு முன்னர் எனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளார்.மேலும் அந்த கடிதத்தில் பெருந்தன்மை வாசகங்கள் இருந்தன என கூறியுள்ளார்.

முன்பு டிரம்ப் கூறியது போல் புதிய அதிபராக ஜோ பிடென் பதவி ஏற்பு விழாவில் தான் பங்குகொள்ள மாட்டேன் என்பதற்கு ஏற்ப பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.