மாஸ்க்கை கழற்றியதால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நடந்த கொடூரம்

டொனால்டு டிரம்புக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் அந்நாட்டு ராணுவ மருத்துவமனையில் டிரம்ப் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரம்ப், திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகை திரும்பினார்.

வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் உள்ள ஸ்டேட்லே பால்கனிக்கு வந்த டிரம்ப், புகைப்படத்திற்கு தம்ஸ் அப் காட்டினார். அப்போது, மாஸ்க்கை கழற்றி தனது பாக்கெட்டில் டிரம்ப் வைத்துக்கொண்டார். மேலும், கரோனா வைரசைக் கண்டு அமெரிக்கர்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் டிரம்ப் கூறினார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது மிக அவசியம் என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்தும் வகையில், தொற்று பாதித்த டிரம்ப் மாஸ்க் அணியாமல் அலட்சியமாக இருந்தது சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கு மேற்பட்ட உயிரையும் அமெரிக்காவில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் காவு வாங்கியுள்ள கரோனாவை டிரம்ப் குறைத்து மதிப்பிடுவது விமர்சனங்களை சந்தித்து வருகிறது.மேலும் நெட்டிஸின்கள் டிரம்ப்பை வசைபாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here