மீண்டும் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் கலவரம் நடைபெறுமா?

டிரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்தில் மீண்டும் கலவரங்களை நிகழ்த்த திட்டமிட்டு வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், பல, எம்.பி.,க்குக்கு மிரட்டல்கள் வருகின்றன. கொலை செய்யப் போவதாகவும், நாடாளுமன்ற வளாகத்தில் தாக்கப் போவதாகவும், பலருக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளன.

சமூக வலை தளங்களில், இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நாடாளுமன்ற வளாகத்தில் மற்றொரு வன்முறை சம்பவம் நடப்பதை தடுக்க, தேவையான ஏற்பாடுகளில், பாதுகாப்பு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.