சசிகலா எப்படி உள்ளார்..நாளை மறுநாள் அவர் விடுதலை பெருகிறாரா..

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டர்.மேலும் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கையில் தெவிக்கப்பட்டது.தற்போது சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அவருக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்,தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சசிகலா உடல்நிலை சீராக உள்ளது, உணவு உட்கொள்கிறார். சசிகலாவுக்கு கொரோனா தொற்று குறைந்துள்ளது.

அவரை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும் சசிகலா வரும் 27ஆம் தேதி உறுதியாக விடுதலை செய்யப்படுவார் என்று கர்நாடகா சிறைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.