TRB: முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு

CSIR-NPL recruitment
CSIR-NPL ஆட்சேர்ப்பு விபரங்கள்

TRB: அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கணினி வழியில் நடத்தப்படும்

போட்டித் தேர்வுக்கு, இரண்டு வகையான, ‘ஹால் டிக்கெட்’டுகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை — 1 மற்றும் கணினி பயிற்றுனர்கள் நிலை — 1 ஆகிய பதவிகளில் காலியிடங்களை நிரப்ப, வரும் 12 முதல் 20ம் தேதி வரை போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது.

இதற்கான அட்டவணை இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, இரண்டு வகையான ஹால் டிக்கெட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

உள்ளாட்சி தேர்தல்இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., தலைவர் லதா வெளியிட்டுள்ள அறிவிப்பு:உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும், பிப்., 19 தவிர மற்ற நாட்களில், அட்டவணையில் கூறிஉள்ளபடி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு கணினி வழி போட்டித் தேர்வு நடத்தப்படுகிறது. பயிற்சி தேர்வுதேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். தேர்வர்களுக்கான தேர்வு மையம், எந்த மாவட்டம் மற்றும் நகரத்தில் உள்ளது என்பதற்கான ஹால் டிக்கெட் முதலில் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கு மூன்று நாட்களுக்கு முன் ஹால் டிக்கெட் வெளியிடப்படும். தேர்வு மையம் மாற்றம் குறித்த எந்த விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்படாது.

தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, அதனுடன் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அசல் அடையாள அட்டை; விண்ணப்பித்தலின் போது சமர்ப்பித்த பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தையும், தேர்வு மையத்துக்கு எடுத்து வரவேண்டும்.

முற்பகல் தேர்வுக்கு காலை 7:30 மணிக்கு முன்னரும்; பிற்பகல் தேர்வுக்கு, 1:30 மணிக்கு முன்னரும் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும். தாமதமாக வருவோர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

கணினி வழி பயிற்சி தேர்வு மேற்கொள்வோர், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வசதியில், பயிற்சி தேர்வை மேற்கொள்ளவும். மற்ற விபரங்களை இணையதளத்தில் பார்த்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: CBI: தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு