கரோனாவால் உலகளவில் 3 கோடியே 53 லட்சம் பேர் பாதிப்பு!

மீண்டும் ஊரடங்கு வருமா

உலக நாடுகளை மிரட்டும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் பல நாடுகள் திணறுகின்றன. வைரஸ் தடுப்பூசி மருந்து கண்டுபிடிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக களமிறங்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.

இதுவரை உலகளவில் 3 கோடியே 53 லட்சத்து 88 ஆயிரத்து 157 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 41 ஆயிரத்து 537ஆக அதிகரித்துள்ளது. வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 66 லட்சத்து 9 ஆயிரத்து 676 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 621 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக இந்தியாவில்தான் 74 ஆயிரம் கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், உலகளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here