எங்கள் கட்சியில் எந்த பிரச்சனையும் இல்லை- கடம்பூர் ராஜூ

கோவில்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிமுகவில் பிரச்சினையே இல்லை. அரசு சிறப்பாக செயல்பட துணை முதல்வர் துணையாக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

அதிமுக செயற்குழுவில் பல்வேறு விவாதங்கள் நடந்தன. தேர்தல் வரும் நேரத்தில், என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம். யாருடன் கூட்டணி வைக்கலாம் என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. யார் முதல்வர் என்று கேள்வி அங்கு எழவில்லை. அதிமுகவில் பிரச்சினையில்லை.

ஆனால், வெளியில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு உள்ளது. எந்தப் பிரச்சினையும் இல்லை என்பதை தனது டுவீட்டர் பதிவில் துணை முதல்வர் ஓபிஎஸ் சூசகமாக தெரிவித்துள்ளார் எனவும் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.