இந்தியாவில் இதுவரை கரோனா பாதிப்பு பற்றி தெரியுமா?

tn news : மீண்டும் ஊரடங்கு வருமா
மீண்டும் ஊரடங்கு வருமா

இந்தியாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 78,524 பேருக்கு புதிய பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

இதனால் மொத்த பாதிப்பு 68 லட்சம் என்ற எண்ணிக்கையை கடந்து உள்ளது. நாடு முழுவதும் 9 லட்சத்து 2 ஆயிரத்து 425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 58 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் இதுவரை குணமடைந்து சென்றுள்ளனர்.

நாட்டில் கரோனா பாதிப்புகளால் 1 லட்சத்து 5 ஆயிரத்து 526 பேர் மரணமடைந்து உள்ளனர். இதுவரை 68 லட்சத்து 35 ஆயிரத்து 656 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.