திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து !

Tirupati Temple
திருப்பதி மலையில் 7 கி.மீ. நீள பக்தர்கள் வரிசை

கரோனா தொற்றின் பரவல் காரணமாக திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கரோனா தொற்று கடந்த வருடம் பரவ தொடங்கிய நிலையில் கோவில்களில் தரிசனம் செய்ய பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.மீண்டும் கரோனா குறைய தொடங்கியதால் கோவில்கள் திறக்கப்பட்டன.தற்போது கரோனா அசுர வேகத்தில் பரவி வருகிறது.

அதனால் திருப்பதியில் நாளை முதல் இலவச தரிசனத்தை ரத்து செய்துள்ளது. திருப்பதிக்கு வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு தரிசனத்திற்கு வரவேண்டும். ரூ.300 கட்டண தரிசனம், வி.ஐ.பி. தரிசன பக்தர்கள் மற்றும் ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.