நாளை தமிழகத்தில் வங்கிகள் செயல்படாது

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

நாளை (6ம் தேதி) முதற்கட்ட வாக்குப்பதிவும், வரும் 9ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்றுடன் முடிவடைந்து விட்டன.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அந்தந்த பகுதிகளில் போலீசார் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளை தயார் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கும் 6 மற்றும் 9ம் தேதிகளில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இந்த 9 மாவட்டங்களில் உள்ள வங்கிகளுக்கு நாளை (6ம் தேதி) மற்றும் 9ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர் குழுமம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு