அதிகரிக்கும் விலைவாசி..உயர்வில் தக்காளியின் விலை !

கொரோனா தொற்று குறைந்து வரும் இந்த காலத்தில் மக்கள் தங்களது இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.இந்த ஊரடங்கு காலத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

ஆனால் தற்போது மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே போகிறது.அந்த வகையில் பெட்ரோல்,டீசல்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இவைகள் ஏற தொடங்கி உள்ளன.

இதில் தற்போது தக்காளி விலை கடந்த சில நாட்களாக விலை அதிகரித்து காணப்படுகிறது.ஒரு கிலோ தக்காளி ரூ.30 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.65 ஆக விற்கப்படுவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : பொறியியல் படிப்புகளில் விருப்பம் காட்டாத மாணவர்கள் !