சுங்கச்சாவடிகளை கட்டண முறை நீக்கம் – மத்திய அரசு திட்டம் !

நாடு முழுவதும் உள்ள கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளை நீக்கி , ஒரு வருடத்திற்குள் ஜி.பி.எஸ் முறையிலான கட்டண வசூலை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தெரிவித்தார்.

வாகனங்களின் ஜி.பி.எஸ் இமேஜிங் அடிப்படையில் சுங்கவரி வசூலிக்கப்படும்.ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துதல் மின்னணு முறையில் செய்யப்படுவதால், வாகனங்கள் சுங்கச்சாவடிகள் வழியாக தடையின்றி செல்வதை உறுதிசெய்ய முடியும்.

மேலும் ஃபாஸ்டேக்குகளைப் பயன்படுத்தி கட்டணம் செலுத்தாத வாகனங்கள் குறித்து போலீஸ் விசாரணைக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் நிதின் கட்கரி மேலும் கூறினார்.