பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் !

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தியா 4 தங்கம், 7 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் உட்பட 17 பதக்கங்களை வென்றுள்ளது.இந்தியாவை சேர்ந்த 54 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.இந்த முறை இந்தியாவுக்கு பதக்கங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில்,டோக்கியோ பாராலிம்பிக் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கமும், சிங்க்ராஜ் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

மேலும் இவர்கள் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களைக் கௌரவிக்கும் விதமாக அம்மாநில அரசு மணீஷ் நார்வாலுக்கு 6 கோடி ரூபாயும், சிங்ராஜூக்கு 4 கோடி ரூபாயும் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.