பொங்கல் பரிசு: டிசம்பர் 26 முதல் டோக்கன் விநியோகம்

பொங்கல் பரிசுடன், ரூ. 2500 பெறுவதற்கு டிசம்பர் 26ஆம் தேதி முதல் டோக்கன் விநியோகம் தொடங்குகிறது.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பொங்கல் பரிசுடன், ரூ. 2500 ரொக்கம் பெறுவதற்கு டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.