சரியும் தங்கம் விலை..!

மத்திய அரசானது 2021-2022 ம் ஆண்டிற்கான ஆண்டு பட்ஜெட் நேற்று வெளியிடப்பட்டது. அதில் தங்கத்தின் மீதான வரி குறைக்கப்படுவதான அறிவிப்பு வெளியிடப்பட்டதை அடுத்து, தங்கத்தின் மீதான விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4483 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.42 குறைந்து, கிராமானது ரூ.4441 க்கு விற்பனையாகிறது.

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.4867 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.42 குறைந்து, கிராமானது ரூ.4825 க்கு விற்பனையாகிறது.