இன்றைய ராசி பலன்

ஒரு முடிவை எடுக்கும் முன் பல முறை சிந்தித்து அதன் பின் எடுப்பது நலமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

ரிஷபம்:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அபாரமான நாளாக அமையும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். பெண்களுக்கு நினைத்ததை நடத்தி காட்ட கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகளைப் பெறலாம். கூட்டுத் தொழில் செய்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அவன் மனைவி உறவுக்குள் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.

கடகம்:

இறை வழிபாடுகள் மூலம் மன அமைதியை காண்பீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைப்பதில் சில சிக்கல்கள் நீடிக்கலாம். எவரையும் எளிதில் எடை போடும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு சவால் ஒன்று காத்திருக்கிறது.

சிம்மம்:

உங்களுடைய வெற்றிப் பாதையில் மற்றவர்கள் பயணிப்பதை நீங்கள் கவனிக்கத் தவறினால் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு புதிய புரிதலுடன் துவங்க இருக்கிறது.

கன்னி:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் பொறுமையை இழக்காமல் காப்பது நல்லது. பொறுமையிழந்து செயல்படும் உங்களுடைய செயல் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கும். சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

துலாம்:

நீண்ட நாளை முயற்சிகளில் இன்று பலன் கொடுக்கும் வாய்ப்புகள் உண்டு. இது வரை நிலுவையில் இருந்த பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

சொத்துக்கள் வாங்கும் மற்றும் விற்கும் முயற்சியில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளாக இருப்பவர்கள் மூலம் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு.

தனுசு:

தன்னம்பிக்கையை தளரவிடாமல் தொடர் முயற்சியை மேற்கொள்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும் வகையில் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்சனை நீங்கும்.

மகரம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு நீண்ட நாளாக உங்களுக்கு கிடைக்காத அங்கீகாரம் கிடைக்கப் பெறும். சுயதொழில் கூட்டு பணி புரிபவர்கள் தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்:

உத்யோகத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான பிரச்சினைகளை திறம்பட சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சக பணியாளர்களின் ஒத்துழைப்பை பெறுவார்கள்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக இருக்கும். கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளின் வழியே நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.