மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவ பொறுமையை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் உங்களுக்கு இருந்த போட்டிகள் விலகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களுடைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் மனதில் சில குழப்பங்கள் எழலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய எதிரிகளை இனம் கண்டு கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை திறம்பட சமாளிப்பீர்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆவதற்கு இடையூறு ஏற்படும். கணவன் மனைவி இடையே சிலசண்டை சச்சரவு குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கூடுமானவரை அமைதி காப்பது நல்லது. சுயதொழிலில் மற்றவர்களை மதிக்கும் படியான உயர்வு உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவை இல்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் உங்களுடைய பலவீனம் அறிந்து சிலர் பிரச்சனை செய்வார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான இட மாற்றம் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுடைய விடா முயற்சிக்கும் உரிய பலன்களை காணும் நேரம் இது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமைக்கான அங்கீகாரத்தை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நட்பு வட்டம் விரியும். கணவன் மனைவி இடையே இருக்கும் உறவு சிக்கல்கள் நீங்கி பரஸ்பர ஒற்றுமை மேலோங்கி காணப்படும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடு செய்வதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத டென்ஷன் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி இடையே பரஸ்பர அன்னோன்யம் அதிகரிக்கும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே தேவையில்லாத சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் காணலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் வகையில் சுப காரியங்கள் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியும் எச்சரிக்கையாக எடுத்து வைப்பது நல்லது. தேவையில்லாத பழிகளை சுமப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தொழிலுக்கு ஏற்றம் தரும் வகையில் அமையும். கணவன் மனைவி இடையே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய புதிய சிந்தனைகள் மூலம் புதிய பாதைகள் பிறக்கும் வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கூடுமானவரை கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நன்றி கடன் செலுத்தக் கூடிய வாய்ப்புகள் அமையும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் சில விஷயங்கள் நீங்கும். நண்பர்களுடனான பிரச்சனைகள் தீர்வதற்கு விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சுய தொழிலில் லாபம் உண்டு.















