கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 89.96 ரூபாய், டீசல் லிட்டர் 82.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை முதல்முறையாக 90 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி பெட்ரோல் விலை இன்று 22 காசு உயர்ந்து லிட்டர் 90.18 ரூபாய்க்கும் , டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து லிட்டர் 83.18 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.



