ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற கோரி ஜனாதிபதியிடம் மனு – புதுவை முதல்வர் !

புதுவை முதல்வர் நாராயண சாமி மற்றும் ஆளுநர் கிரண் பேடி இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது.மேலும் கடந்த மாதம் ஆளுநரை எதிர்த்து முதல்வர் நாராயண சாமி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் புதுவையில் காங்கிரஸ் அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளை ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதலமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதால் மாநில வளர்ச்சி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர்.மேலும் இன்று முதல்வர் நாராயண சாமி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்தித்தார் புதுவை அரசுக்கு கிரண்பேடி இடையூறு விளைவிக்கிறார்,

மேலும் கிரண்பேடியை திரும்பப்பெற தி 30 தொகுதியிலும் மக்களிடம் கையெழுத்து அடங்கிய பிரதியை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார்.இந்த சந்திப்பில் அமைச்சர் கந்தசாமி, அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், ஆகியோரும் தனியாக மனு அளித்தனர்.