இன்றைய ராசி பலன்

மேஷம்:

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எதிர்பார்த்த தகவல் நல்ல தகவலாக இருக்கும். கணவன், மனைவி இருவரும் எந்த ஒரு முடிவையும் நிதானமாக யோசித்து எடுப்பது நன்மை தரும்.

ரிஷபம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இல்லாமல் மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட்டால் பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெண்களுக்கு எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட யோகம் வாய்க்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பெரிதாக பாதிப்புகள் எதுவும் இருக்காது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்கள் பக்கம் தான் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி சிறப்பான ஒரு முன்னேற்றத்தை காணலாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சேமிப்பின் அற்புதத்தை உணர்ந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப யோகமாக அமையக்கூடிய நாளாக இருக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்புடைய விஷயங்களில் நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் வீட்டிற்கு புதிய நபர்களின் வருகை சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப் பெறும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று சட்டென முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்கக் கூடிய உத்வேகம் பிறக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறைவழிபாடுகள் மூலம் மன அமைதியை காண்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஜெயம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை அமையும். பிள்ளை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சீரான முன்னேற்றம் காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறைந்து முன்னேற்றம் பெருகும்.

மீனம்

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.