
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நன்மைகள் நடக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கடினமான காரியங்களைக் கூட எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள்.

ரிஷப ராசியில் பிறந்தவர்களுரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. கூடுமானவரை தேவையற்ற ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தை மேற்கொள்வது நல்லது

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்கள் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை அடைய கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிகம் பொறுமை தேவைப்படக்கூடிய நாளாக இருக்கிறது.

சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும்.

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுபயோக வைபவங்கள் கைகூடிவரும் இனிய நாளாக அமைய இருக்கிறது. தடைபட்ட திருமண யோகம் கைகூடி வரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும்

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் சரியாக கணிக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நீங்கள் நினைத்தது நினைத்தபடி நடக்கும் அற்புத நாளாக அமைய இருக்கிறது

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பணப்புழக்கம் அதிகரித்து காணப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடமை கண்ணியம் என்று செயல்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வாடிக்கையாளரின் நன்மதிப்பை பெறுவீர்கள்

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாளாக போராடிக் கொண்டிருக்கும் வேலைகள் எளிதாக முடிவடையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்

கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பாராத திடீர் நன்மைகள் உண்டாகும். நீங்கள் என்றோ செய்த உதவி இன்று உங்களுக்கு பலனாக அமையும்.

மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். பொருளாதார ரீதியான ஏற்றம் சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகளை எளிதில் பூர்த்தி செய்துவிடுவீர்கள்.



