இன்றைய ராசி பலன்

மேஷம்:

தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பங்குதாரர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சற்று கவனத்துடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்து வந்த போட்டிகள் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை அடையலாம். தேவையில்லாத கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த மந்தமான நிலை மாறும். நீண்ட நாள் கேள்விகளுக்கான பதில் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் காலத்தை தேவையில்லாமல் விரையம் ஆக்குவதை தவிர்ப்பது நல்லது.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க கூடிய வகையில் நடந்து கொள்வீர்கள்.

கன்னி:

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு நினைக்கக் கூடிய வகையில் லாபம் அமையும்.

துலாம்:

அமைதியான, நிலையான, பாதுக்காப்பான நாளாக அமையும்.  கிரகங்களின் சாதகமான பார்வையால், மேன்மை கிடைக்கும். பொருளாதார விசயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. இறுதி முடிவுகளை சற்று தள்ளிப்போடுவது நல்லது.

விருச்சிகம்:

புதிய அடையாளத்துடன் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் அறிவுரைகள் சிறந்ததாக இருக்கலாம். தவிர்க்க முடியாத பிரச்சனைகள் என்று எதுவுமில்லை. சமரசமே சிறந்த ஆயுதமாகும்.

தனுசு:

வரும் வாரங்களில் வாழ்க்கை துணைவியாரின் எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னுரிமைப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க தொடங்குவீர்கள். உண்மைகளை அறிந்து கொள்வதற்கும், அதனுடன் உரையாடுவதற்கும் இது சிறந்த நேரம்.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறலாம். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய வேலையில் மட்டும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நாணயமாக நடந்து கொள்ள முயற்சி செய்வீர்கள்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் பல நடைப்பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். உத்யோகத்தில் சுமுகமான மனநிலை இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு மனதில் போட்டு கஷ்டப்படுத்தி கொண்டிருந்த சில விஷயங்கள் முடிவுக்கு வரும். எதிலும் நிதானமும், தெளிவும் இருப்பது நல்லது.